யுத்தத்தில் மகளை இழந்த தாய் மன அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை

இறுதி யுத்தததில் தனது மகளைப் பறிகொடுத்த தாயொருவர் மன அழுத்தம் தாங்கமுடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தர்மலிங்கம் புனிதவதி (வயது 60) என்ற தாயொருவரே இவ்வாறு மரணமானவராவார்.

இவரது பிள்ளைகளில் ஒருவரை யுத்தம் காவுகொண்டு சென்றதைத் தொடர்ந்து இன்னொரு மகளும் இன்று வெளிநாடென்றிற்கு செல்லவிருந்த நிலையிலேயே மனஅழுத்தம் தாங்காமல் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யுத்தம் காரணமாக 62 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மனநோய்க்கு ஆளாகியுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கைதடி கிழக்கு பகுதியில் மாட்டிற்கு தண்ணீர் எடுக்கச் சென்ற வயோதிபர் ஒருவரும் கிணற்றில் விழுந்து மரணமாகியுள்ளார்.

Related Posts