யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. யுத்தத்தின் போது பாலியல் வன்கொடுமைகள் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக இலங்கை அறிவித்துள்ளது.
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி நியூயோர்க்கில் இந்த பிரகடனம் அறிமுகம் செயப்பட்டது, இதில் 122 உறுப்பு நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்த பிரகடனத்தில் நேற்று வரை மொத்தமாக 155 உறுப்பு நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.
அனைவரினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.