யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு விளக்கேற்றுவதற்கும் வணக்கம் செலுத்துவதையும் யாரும் தடைபோடமுடியாது..யாழ். மாநகர சபையின் ‘மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்திட்டம்’ நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்…
அபிவிருத்தி திட்டங்களோடு மட்டும் நாங்கள் நின்றுவிட முடியாது. அடுத்தகட்ட நிலையை அடைவதற்கும் நாங்கள் முன்னேறவேண்டும். இதற்கு தடையாக சிலர் செயற்பட்டு வருகின்றனர்.
நாட்டில் நீண்டகாலமாக நிலவிவந்த போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளபோதும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்க சிலர் முயற்சித்து வருகின்றார்கள். இதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்ககூடாது. தற்போதுள்ள அமைதியை நிரந்தர அமைதியாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன. யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு விளக்கேற்றுவதற்கும் வணக்கம் செலுத்துவதையும் யாரும் தடைபோடமுடியாது. தனி மனிதராக வீடுகளில் அல்லது வியாபார நிலையங்களில் இதனைச் செய்யும்போது யாரும் தடைவிதிக்க முடியாது. அப்பாவி மாணவர்களைத் தூண்டிவிட்டு இவ்வாறான செயல்களைச் செய்வது கவலைக்குரிய விடயம் என்பதோடு கண்டிக்கத்தக்க விடயமும் என்று தெரிவித்த அமைச்சர், தற்போதுள்ள சூழலில் நாம் இருப்பதை வைத்துக்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும். அதற்கான சூழலை நாங்கள் உருவாக்கவேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.