கிளிநொச்சி உதயநகரில் 30வீட்டுத்திட்டத்தில் வசித்துவந்த 31 வயது இளைஞன் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார்.
சிவலிங்கம் சிவச்செல்வன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.
இவருக்கு கடந்த யுத்தத்தின்போது மனநோய் ஏற்பட்டதாகவும், பின்னர் மனநோய்க்கான சிகிச்சை எடுத்துவந்ததாகவும் தெரியவருகின்றது. இந்நிலையிலேயே இவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என மரணவிசாரணையின்போது தெரியவந்துள்ளது என இவரது மரணவிசாரணையை விசாரணைசெய்த மரணவிசாரணை அதிகாரி சிவலோகமூர்த்தி மேற்கொண்டார்.