நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவால் தமிழ் மக்கள் அதிகளவுக்கு பல இழப்புக்களைச் சந்தித்துள்ள நிலையில் 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்ளமை பதிவாகியுள்ளது.
யுத்தம் பலரை பலியெடுத்துள்ள நிலையில் மிஞ்சியிருப்பவா்களில் பெரும்பாலானவா்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அங்கத்தை இழந்தவா்களாவும் காணப்படுகின்றனா். அத்தோடு பெரும்பாலானவா்கள் இரும்புத் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் வாழ்ந்து வருகின்றனா்.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு மாவட்டச்செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபர கணக்கெடுப்பின்படி 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்மை பதிவாகியுள்ளது.
இதில் மிகவும் வேதனையான விடயம் இந்த 282 போில் 43 போ் தங்களுடைய இரண்டு கண்களையும் இழந்திருப்பது. அத்தோடு மிகுதி 239 பேரும் தஙடகளுடைய ஒரு கண்ணை இழந்திருக்கின்றனா் என கிளிநொச்சி மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் வெளிப்படுத்துக்கிறது.
இதில் கரைச்சி பிரதேச செயலக பிாிவில் 108 போ் ஒரு கண்,18 போ் இரண்டு கண்களையும், கண்டாவளையில் 49 போ் ஒரு கண், 12 போ் இரண்டு கண்களையும்,பூநகாி பிரதேச செயலக பிாிவில் 40 போ் ஒரு கண், 13 போ்’ இரண்டு கண்களையும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிாிவில் 42 போ் ஒரு கண்ணையும் இழந்துள்ளனா்.