யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நட்டஈடுகள் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவுசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
நாட்டில் நிலவிய யுத்தத்தினால் சேதமாக்கட்டப்பட்ட ஆலயங்கள் மற்றும் உறவுகளை இழந்தோர், அங்கங்களை இழந்தோர் மற்றும் சொத்துக்களை இழந்தோருக்கான நட்டஈட்டுக்கான காசோலைகளே நேற்று ஒரு தொகுதியினருக்கு வழங்கிவைக்கப்பட்டன.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 252 பேருக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் குறித்த காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் அன்னலிங்கம், அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிற்கு மொத்தமாக 47 மில்லியன் ரூபாய் நிதி 647 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.