யுத்தத்தால் நானும் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையில் உங்கள் வேதனைகளை அறிவேன் -அங்கஜன்

angajanமாதகல் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

மாதகல் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் றெஜினோல்ட் குரே கலந்துகொண்டார்.

இந்தக் கலந்துரையாடலின்போதே இந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இதன்போது மின்சாரம், வீடமைப்பு, மருத்துவ தேவைகள், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் மாதகல் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்கள் முன்வைத்தனர்.

இந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் றெஜினோல்ட் குரே, இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக கூறினார்.

மேலும் இங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன் தெரிவிக்கையில்,

யுத்தத்தால் நானும் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையில் உங்கள் வேதனைகளை அறிவேன். நான் வாழ்ந்த வீடுகள், நிலங்கள் எல்லாம் இப்போதும் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளே இருக்கிறது. உங்களைப் போன்றே நானும் எப்படியாவது எனது நிலங்களை பெறுவதற்காக போராடி வருகின்றேன்.

நாம் இன்றைய நிலையில் ஏனைய மாகாணங்களை போன்று எமக்கு தேவையான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, எமக்கான முன்னேற்றங்கள் அனைத்தையும் முடிந்தவரையில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

Related Posts