யாழ்.வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மீண்டும் தாக்குதல் முயற்சி

யாழ்.போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியக் கலாநிதி என்.ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மீண்டும் தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் இத்தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வைத்தியரது வீட்டிற்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து வைத்தியர் சத்தம் கேட்டு மின்விளக்குகளை ஒளிரச்செய்ய குறித்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என முறைப்பாட்டில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் வைத்தியரால் முறைப்பாடொன்று நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வருடம் யூன் மாதம் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கெர்டுத்தமைக்காக வைத்தியர் வீட்டின் மீது கழிவு ஒயில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts