யாழ். வைத்திசாலை வீதியிலுள்ள வாகன தரிப்பிடங்களை அகற்ற நடவடிக்கை

யாழ். நகரத்தில் வைத்திசாலை வீதியில் உள்ள வாகனத் தரிப்பிடங்களை அகற்றி அவற்றை பிறிதொரு இடத்திற்கு மாற்றுவதற்கு யாழ். மாநகர சபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பெரும்பாலும் யாழ். வைத்தியசாலை வீதியில் பெருமளவு வாகனத் தரிப்பிடங்கள் காணப்பட்டு வருகின்றது இதனால் பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவருவதோடு வீதி விபத்துக்ளும் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் யாழ் வைத்திசாலை வீதியில் உள்ள சகல வாகனத் தரிப்பிடங்களையும் வேறு ஒரு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக வேலைத்திட்டங்கள் யாழ். மாநகர சபையின் திட்டமிடல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆத்துடன் யாழ் நகரத்தில் உள்ள கழிவு நிர்வடிகால்களுக்கு முன்னால் பல வர்த்தக நிலையங்கள் தங்கள் கட்டிடங்களை அமைத்துள்ளன அவற்றை அகற்றி அதில் நடைபாதை ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்வில் விரைவில் வர்த்தகர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts