யாழ். வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா

யாழ்ப்பாணம் குருநகரில் புதிதாக அமைக்கப்பட்ட வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா சனிக்கிழமை அந்த பிரதேச மக்களினால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது முழுமையாக அழிக்கப்பட்ட இக்கோவில் அந்த பகுதி கடற்றொழிலாளர்களின் கடின உழைப்புக்கு மத்தியில் கட்டிமுடிக்கப்பட்டு முதல் திருவிழாவை கொண்டாடியுள்ளது.
velankanni_maathaa
யாழ். ஆயரின் பணிப்பின் பேரில் முன்னாள் கியூ டெக் இயக்குநர் அருபாணி ஜெயக்குமார் திருப்பணியை ஒப்புக் கொடுத்தார்.

இந்த புனித வேளாங்கன்னி மாதா கடற்றொழிலாளர்களின் காவல் தெய்வமாக திகழ்கின்றது.

Related Posts