யாழ்.வேம்படி அதிபர் விவகாரம்: நாளை காலை பேராட்டத்திற்கு பழைய மாணவர்கள் சங்கம் அழைப்பு

யாழ். வேம்படி மகளீர் கல்லூரி அதிபர் விவகாரம் இதுவரை தீர்க்கப்படாத நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறி பழைய மாணவர்களால் எதிர்ப்பு பேராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ் எதிர்ப்பு போராட்டம் நாளை காலை 8 மணியளவிவில் பாடசாலை முன்பாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் ஒய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய அதிபராக கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்ட அதிபரை பொறுப்பேற்க முடியாதவாறு அமைச்சர் டக்ளஸின் உதவியுடன் பதில் அதிபர் தொடாச்சியாக செயற்பட்டு வருவதாக பழைய மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் இவர் மீது நடவடிக்கை எடுக்க கல்வி அதிகாரிகளும் பயந்து நடுங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

க.பொ.த சாதாரண தரம் நெருங்கும் நிலையில் மாணவிகளின் கல்வியினை பழாக்கும் வகையில் செயற்படும் பதில் அதிபருக்கு எதிராக அனைவரையும் ஒன்றாக இணையுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts