யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஹபீர் ஹாசிம் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘வாள்வெட்டு சம்பவம் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதன்படி இன்றைய அமைச்சரவையில் கலந்துரையாடப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவரை இலக்கு வைத்து இனந்தெரியாதோர் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், யாழில் முப்படையினரின் உவியுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.