யாழ்.வாள்வெட்டு சம்பவம்: இளைஞர் கைது

நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் இளைஞரொருவர் யாழ். தாவடிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர், யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர், கடந்த 08 ஆம் திகதி நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து 8 பேர் கொண்ட குழுவினருடன் இணைந்து இருவர் மீது சரமாரியாக வாளால் வெட்டிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டதாகவும், விசாரணையின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Related Posts