யாழ்.வலிகாமம் வடக்கில், அப்பகுதி பிரதேச சபைக்குச் சொந்தமான நிலத்தை தமக்குப் பெற்றுத் தருமாறு இராணுவத்தினர், சபைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த காணியை அதன் உரிமையாளர் அற்ரோனிப் பவர் மூலம் தந்திருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.சாப்பை கலட்டி என்ற பகுதியிலுள்ள 90பேச் அளவுள்ள காணிக்கே இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர். இதேவேளை குறித்த காணி 1971ஆம் ஆண்டு காலப்பகுதியில் சபையினால் விளையாட்டு மைதானம் அமைப்பிற்கென ஒதுக்கப்பட்ட காணியாகும்.
அதைவிடவும் தற்போது இராணுவம் பெற்றுத்தரக் கோரும் காணியைச் சுற்றிலும், மக்கள் குடிமனைகள் அதிகம் காணப்படுகின்றது. இந்த நிலையில் இராணுவத்தினருக்கு இந்தக் காணியை எவ்வாறு வழங்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரணம் பொதுமக்கள் அதிகமுள்ள பகுதியில் இராணுவத்தினரின் குடியிருப்பு மக்களின் இயல்பு வாழ்வை பாதிப்பதுடன், வேறுபல சிக்கல்களையும் உருவாக்கி விடும். இதேபோல் கடந்தகாலங்களில் மக்கள் இந்தப் பகுதியில் இருந்திருக்கவில்லை.
அதனால் விளையாட்டு மைதானம் ஒன்றின் அவசியம் குறித்து அவர்கள் சிந்திக்காது போயிருக்க முடியும். ஆனால் தற்போதுள்ள நிலையில் அவர்கள் விளையாட்டு மைதானம் ஒன்று குறித்துச் சிந்திக்க முடியும் எனவே இதற்கு ஒப்புதல் வழங்க கூடாதென மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.