Ad Widget

யாழ்.வணிகர் கழகத்தின் கோரிக்கையைத் அடுத்து உளுந்து இறக்குமதித் தடையை நீக்க பிரதமர் நடவடிக்கை!!

உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு, பிரதமர் மகிந்த ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகம், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதமர், ஜனாதிபதியின் செயலாளருக்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உளுந்து இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், தமிழர்களின் பிரதான உணவு வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதை யாழ்ப்பாணம் வணிகர் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து, உளுந்து மீதான தடையை மறுபரிசீலனை செய்வதற்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு பிரதமர் இன்று காலை ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related Posts