“யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மரண தண்டனை வழங்கப்பட்து இன்றைய தினமே” என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் இருவரை கொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயமேற்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நீதிபதி தெரிவிக்கையில், “யாழ். குடாநாட்டையே பதட்டத்திற்கு உள்ளாக்கிய படுகொலை தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு இரண்டரை வருட கால பகுதிக்குள் தீர்ப்பும் அளிக்கப்பட்டு உள்ளது.
யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் இவ்வாறு பாரிய தண்டனை வழங்கி இன்றைய தினமே (நேற்று முன்தினம்) தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.