யாழ்.முகாம்களில் 4000ற்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள்

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் யாழ்பபாணத்தில் தொடர்ந்தும் முகாம்களில் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள 32 முகாம்களில் 1318 குடும்பங்களைச் சேர்ந்த 4737 பேர் முகாம்களில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் தேவை ஏற்பட்டால் மேலும் நிதி ஒதுக்கீடுகளை பயன்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts