யாழ் மீனவருக்கு சிக்கிய ஒன்றரை கோடி பெறுமதியான மீன்கள்!

யாழ் .வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு, சுமார் ஒன்றரை கோடி பெறுமதியான மீன்கள் சிக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே, நேற்று (செவ்வாய்க்கிழமை) 20 ஆயிரம் கிலோவிற்கும் அதிமான மீன்கள் சிக்கியுள்ளன.

குறித்த மீன்கள் பாரை இனத்தை சேர்த்தவைகள் எனவும் நேற்றைய தினமே குறித்த மீனவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts