யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்றது.
2012ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பினை நிறைவு செய்து பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களுக்கான உரிய வேலைகள் கிடைக்காததை கண்டித்தும், தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்களில் உள்ள தவறுகளை கண்டித்ததும் குறித்த போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.
குறித்தபோராட்டமானது இரவு பகலாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.