யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரியாக இதுவரையில் எவரும் நியமிக்கப்படவில்லை

sportsnews-logoயாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரியாக கடமையாற்றிவந்த திருமதி ஏ.எவ்.ஜே.ரூபசிங்கம்  அவர்கள் கடந்த நவம்பர் 26ஆம் திகதி ஓய்வுபெற்றதிலிருந்து இதுவரையில் புதிய யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின் அனுமதி மற்றும் ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு மாவட்ட விளையாட்டு அதிகாரியையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts