யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கருணாரட்ன பதவியேற்பு

police_new_DSPயாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக வி.பி இந்து கருணாரட்ன இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றுகொண்டார்.

கொழும்பு தலைமைப் பொலிஸ் காரியாலயத்தில் இருந்து யாழிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இவர் இன்று காலை யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட இவர் சம்பிரதாய பூர்வமாக தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில், யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேரா உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி முதல் இன்றுவரை பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த எரிக்பெரேரா இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்தே இவர் அப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Posts