யாழ். மாவட்ட தமிழரசுக்கட்சி இளம் வேட்பாளராக தர்சானந் பரமலிங்கம்?

tharsananthவடமாகாணசபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார் என்பது நாளையே முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு கட்சிகளுக்குமான பங்கீடு மற்றும் பொதுவான வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பது பற்றி முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ். மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் செயலாளர் தர்சானந் பரமலிங்கம், ஊடகவியலாளர் வித்தியாதரன், பேராசியர் சிவச்சந்திரன், முன்னாள் யாழ். மாநகரசபை ஆணையாளர் சிவஞானம், ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சகோதரரும் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளருமான சர்வேந்திரா, ஐங்கரநேசன், ஆகியோரும் ரெலோ சார்பில் சிவாஜிலிங்கமும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சங்கையாவும் போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.

Related Posts