தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளர் முத்தையாப்பா தம்பிராசா யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளார்.
உண்ணாவிரத்தின் மேற்கொள்ளும் தம்பிராசா கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த 20ஆம் திகதி யாழ் மின்சார நிலைய வீதியில் வைத்து ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதனால் தனது வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பொலிஸார் எதுவிதமான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை.
அத்துடன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் தன்னைத் தேடியதாகவும் தொடர்ந்து மேற்படி நபர்கள் தொடர்பாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறையிட்டும் இதுவரையிலும் எதுவித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.இதனாலேயே தாம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக” அவர் தெரிவித்தார்.
உண்ணாவிரதம் மேற்கொள்ளும் இவரிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் எவரும் ஆதரவு தெரிவிக்காத நிலையில், ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் குமார் சர்வானந்தன் நேரில் சென்று தம்பிராசாவைச் சந்தித்து உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தாமும் ஆதரவளிப்பாதக தெரிவித்தார்.