யாழ். மாவட்ட சு.க வேட்பாளர்கள் விபரம்

SLFPநடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை சுதந்திரக்கட்சி வெளியிட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் இவர்கள் வேட்பு மனுவில் ஒப்பமிடவுள்ளதாக அக்கட்சியின் யாழ மாவட்ட அமைப்பாளா அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராம நாதன், முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றேமிடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ். பொன்னம்பலம், நெல்லியடி வணிகர் கழகத்தலைவர் அகிலதாஸ், யாழ் மாநர சபை உறுப்பினர் அகமட் சுபியான், எஸ்.செந்தூரன், எஸ். கதிரவேல் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts