யாழ்.மாவட்ட காணி பதிவுத் திணைக்களம் குறித்து மக்கள் அதிருப்தி!

யாழ்.மாவட்ட காணி பதிவுத் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) சேவை ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும், யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தின் ஊடாக அந்த சேவைகளைப் பெற முடியாது என்று மாவட்ட காணிப் பதிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் “தேவையாயின் நேரில் வருமாறு” காணிப் பதிவகத்தின் பிரதம எழுதுவினைஞர் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில், பதிவாளர் நாயகத்துக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts