யாழ்.மாவட்ட இராணுவ ஏற்பாட்டில் உதைபந்தாட்ட பயிற்சி முகாம்

இராணுவத்தின் கஜபாகு படைப் பிரிவு உதைபந்தாட்ட அணிக்கும் வதிரிடையமன்ஸ் உதைபந்தாட்ட அணிக்கும் இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் கஜபாகு உதைபந்தாட்ட அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி மைக்கல் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உதைபந்தாட்ட பயிற்சி முகாமின்போதே மேற்படி போட்டி நடைபெற்றது.

foo

யாழ்.மாவட்ட இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உதைபந்தாட்ட பயிற்சி முகாம்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மூன்று நாட்களாகவும், நெல்லியடி மைக்கல் விளையாட்டுக் கழக மைதானத்தில் மூன்று நாட்களாகவும் இடம்பெற்றிருந்தது.

இவர்களுக்கான பயிற்சி முகாம்களை அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த உதைபந்தாட்ட வீரர்களை உள்ளடக்கிய ஐந்துபேர் கொண்ட குழு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் விளையாட்டு வீரர்களுக்கு இடையே விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்கின்ற மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது பயிற்சி ஆட்டத்தில் கஜபாகு ரெஜிமென்ட் அணியை எதிர்த்து வதிரிடயமன்ட் விளையாட்டுக் கழகம் மோதிக் கொண்டது. முன்பதாக இரு அணிவீரர்களும் அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இதில் 52 ஆவது 55 ஆவது படையணிகளின் தளபதிகளான பிரியந்த ஜயசூரிய, திருநாவுக்கரசு, பருத்தித்துறை பிரதேச செயலர் ஜெயசீலன், ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ் வரன், சமூக சேவையாளர் தமிழழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

பெருமளவான உதைபந்தாட்ட ரசிகர்கள் இதில் கலந்து கொண்டு போட்டியை உற்சாகப்படுத்தினர்.

Related Posts