யாழ் மாவட்ட அரச அதிபர் கிண்ணம் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியினர் வசம்!

யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2014 ஆம் ஆண்டிற்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தினை தெல்லிப்பளை பிரதேச செயலக அணியினர் தனதாக்கி கொண்டனர்.

sports

நேற்று முன்தினம் (31) சாவகச்சேரி வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகளின் இறுதி போட்டிகள் இடம்பெற்றதுடன் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் உரையாற்றுகையில் யாழ் மாவட்ட செயலகம் மற்றும் பதினைந்து பிரதேச செயலகங்களுக்கிடையில் இடம்பெறுகின்ற இப் போட்டி நிகழ்வுகள் உத்தியோகத்தர்களிடையே ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதோடு அவர்களின் ஆளுமை விருத்திக்கும் வழிகோலுகின்றன என தெரிவித்தார்.

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம், பிரதேச செயலாளர்கள் , திணைக்கள தலைவர்கள் , மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Related Posts