யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து நாளைய வாக்களிப்பு நிலையங்களுக்கு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களுடன் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து ஒழுங்குகள், முறைப்பாடுகளுக்கான உடனடி நடவடிக்கைகள் உள்ளடங்கலாக பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டிருந்தது

இதில் வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லு. சூரிய பண்டார, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்துகொண்டிருந்னர்

Related Posts