யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இவ்வாண்டு பாரியளவிலான நிதி ஒதுக்கீடு

cash-money-paymentயாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இவ்வாண்டு பாரியளவிலான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை விரைவாக செயல்படுத்தும் படியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பன்முகப்படுத்திய வரவு செலவுத் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிர்களினால் பாடசாலைகள், சனசமூக நிலையங்கள்,முன்பள்ளிகள் விளையாட்டு கழகங்கள் , ஆலயங்கள் விவசாய அமைப்புக்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சம்பந்தமான விபரங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி யாழ் மாவட்டத்தில் இம்முறை பாரியளவிலான நிதி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் அபிவிருத்தி செயல் திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் விரைவாக அதனை செயலபடுத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிதி சம்பந்தமான அமைப்புக்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளில் திட்டமிடற்கிளையினால் அழைக்கப்பட்டு செயல்திட்டங்கள் பெறப்பட்டு வருவதாகவும் யாழ் மாவட்ட செயலக திட்டமிடற்கிளையின் அதிகாரி ஒருவர் தொவித்துள்ளார்.

Related Posts