யாழ். மாவட்டத்தில் 4,26,703 பேர் வாக்களிக்க தகுதி , வாக்கெண்ணும் பணிகளில் மாற்றம்

Suntharam arumai_CIயாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 26,703 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

அத்துடன் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ்.மாவட்டத்தில் 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்
வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று (நேற்று) முதல் எதிர்வரும் 1 ஆம் திகதி 12 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணிகளை மாவட்ட செயலத்திற்கு வெளியே நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் இதுபற்றிக் குறிப்பிடுகையில் கடந்த காலத்தில் வாக்கெண்ணும் பணிகள் யாவும் மாவட்ட செயலகத்திலே நடைபெற்று வந்ததாகவும் இம்முறை மாவட்டச் செயலகத்தில் போதிய இடவசதியில்லாத காரணத்தினால் இந்த வாக்கெண்ணும் பணிகள் மாவட்டச் செயலகத்திற்கு வெளியே நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக யாழ்.நகரத்தில் உள்ள முக்கிய பாடசாலைகளில் இந்த பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts