யாழ். மாவட்டத்தில் 4,104 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவு செய்த 4 ஆயிரத்து 104 பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“இணையம் ஊடாக 3 ஆயிரத்து 425 பேர் பதிவு செய்திருந்தனர். அதனைவிட எங்குமே பதிவு செய்யாதோர் 779 பேர் யாழ்.மாவட்ட செயலகத்தில் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். மொத்தமாக 4 ஆயிரத்து 104 பட்டதாரிகள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

பதிவு செய்த அனைவருக்குமான நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை நேர்முகப் பரீட்சைப் பணி நிறைவடையும். அவர்களுக்கு நேர்முக தேர்வின் போது புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அமைச்சின் அறிவுறுத்தலுக்கமையவே அந்தப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதுதொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts