யாழ். மாவட்டத்தில் வீடு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்புமனு தாக்கல்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (10) கையளித்தனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், ச.சுகிர்தன், கே.சயந்தன், இமானுவேல் ஆர்னோல்ட், தி.பிரகாஷ், ச. இளங்கோ, ச. சுரேக்கா, சி.கிருஷ்ணவேணி ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வீடு சின்னத்தில் போட்டியிடுகிறது.

இதேவேளை வேட்புமனுத் தாக்கலின் பின்னர் வேட்பாளர்கள் தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வேட்பாளர்களிடம் கையோப்பம் வைக்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் பொருளாளர் கனகசபாபதி போன்றவர்கள் கலந்துகொள்ளவில்லை.

மேலும், இந்த நிகழ்வில் கட்சியின் உப தலைவர் சி.வி.கே. சிவஞானம், குலநாயகம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts