Ad Widget

யாழ். மாவட்டத்தில், வயலின், யோகா, ஹிந்தி கற்கை நெறிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில், வயலின், யோகா, ஹிந்தி ஆகிய கற்கைநெறிகளை யாழ்.இந்திய தூணைத்தூரகம் ஆரம்பிக்கவுள்ளது.

இப்பயிற்சிகள், எதிர்வரும் ஏப்ரல் இறுதிவாரம்- மே மாதம் பகுதியில் ஆரம்பிப்பதற்கு இந்திய தூதரகம் தீர்மானித்துள்ளது.

பாடநெறிக்கான பதிவுக் கட்டணம் 250 ரூபா என்றும் பயிற்சிக்கட்டணம் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிகள் அணைத்தும் வாரநாட்களில் மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை நடைபெறவுள்ளதென்றும் இக்கற்கைநெறிகளை தொடர விரும்புவர்கள் வாரநாட்களில் சமூகமளிக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டுமென யாழ்.இந்திய தூணைத்தூரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்யிற்சிநெறிகள் அனைத்தும் இந்திய துணைத்தூதரகம், இல- 14, மருதடி வீதி, நல்லூரில் இடம்பெறவுள்ளன.

இதற்கமைவாக இப்பயிற்சியை தொடர விரும்புபவர்கள், ஏபரல் 12 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கும் வகையில் தமது விண்ணப்பங்களை, cul.jaffna@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது, 021-222053 என்ற தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தில், பெயர், வயது, இணையவுள்ள பாடநெறி (ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களை தெரிவு செய்ய முடியும்), மேலதிக தொடர்புகளுக்கான விபரங்கள் என்பவற்றை குறிப்பிடுமாறு கோரப்பட்டுள்ளனர்.

india-course

Related Posts