யாழ். மாவட்டத்தில் பதினேழு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 22 ஆம் மற்றும் 25, 26 ஆம் திகதிகளில் தமது வாக்குகளை அளிக்கமுடியும் என யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களினதும், 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஏனைய அரச அலுவலகங்கள், கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், போக்குவரத்துச் சபை டிப்போக்கள், பாதுகாப்பு படை முகாம்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களின் தபால் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts