பட்டதாரி பயிலுநர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுக்கு கடந்த 5,6,7 ம்திகதிகளில் தோற்றிய பட்டதாரிகளில் 2011 டிசம்பா் மாதம் 31ம் திகதிக்கு முன்பதாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகமாயின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் என சான்றிதழ் சமர்ப்பித்தவர்கள் அனைவருக்கும் பட்டதாரி பயிலுநர் நியமனக் கடிதங்கள் திங்கட்கிழமை(2-7-2012) காலை 9 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வழங்கப்பட உள்ளது என அரச அதிபர் அறிவித்துள்ளார். அனைவரையும் சமூகமளித்து நியமனங்களை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது .
பட்டதாரி பயிலுநர் ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு இம் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதனடிப்படையில் தகைமையுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட் டுள்ளனர். தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பயிலுனர்களாக பிரதேச செயலகங்களில் இணைத்துக் கொள்ளப்படுவர்.அதன்பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உயர்தொழில்நுட்டப நிறுவக டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பில் பின்னர் அறியத்தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி பயிலுனர் நியமனம் தொடர்பில் பட்டதாரிகள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் தொடர்பாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.