யாழ்.மாவட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்சி முகாம்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சங்கத்தினால் யாழ் மாவட்ட பாடசாலைகளின் 13, 14, 15 வயதுப் பிரிவு கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த பயிற்சி முகாமில் கொழும்பில் இருந்து வருகைதந்த பயிற்றுவிப்பாளாகள் களத்தடுப்பு பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் தொடர்பில் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.

யாழ்.மாவட்டப்பாடசாலைகளைச் சேர்ந்த முப்பது வீரர்கள் இப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

cricket-coch-4

cricket-coch-3

cricket-coch-2

cricket-coch-1

Related Posts