யாழ். மாவட்டத்தில் ஆடைத்தொழிற்சாலை,இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

இலங்கையிலுள்ள முன்னணி ஆடை தொழிற்சாலையொன்றினை யாழ். மாவட்டத்தில் நிறுவுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள், இலங்கை முதலீட்டு சபையின் வடமாகாண காரியாலயத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை முதலீட்டு சபையின் வடமாகாண சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் ஆர்.ஜெயமனோன், திங்கட்கிழமை (17) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் நிலவும் வேலையில்லா பிரச்சினையை குறைக்கும் முகமாக இந்த ஆடைத்தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.

இதன் முதல் நடவடிக்கையாக ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இளைஞர், யுவதிகள் தங்களின் கல்வித்தகைமை மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு தரங்களிலும், வகைகளிலும் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் தங்கள் பிரதேச செயலகங்களில் அல்லது இலங்கை முதலீட்டு சபை காரியாலயத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

Related Posts