யாழ்.மாவட்டத்தில் அரச ஊழியர்களுக்கு புதுவருடம் முதல் ஒரே வர்ணத்திலான சீருடைகள்

யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் பணியாற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு ஒரே வர்ணத்திலான சீருடை வழங்ப்படவுள்ளதாக தெரியவருகின்றது.இதற்காக பெண்களுக்கான சேலைகள் அடங்கிய ஒரு தொகுதி சீருடைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.எதிர்வரும் புதுவருடத்திலிருந்து இவர்கள் கடமையின் போது கட்டாயம் இதனையே அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு சீருடை வழங்குவது தொடர்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகிருந்த நிலையிலேயே இந்நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் நீல நிலத்திலான சீருடையே வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே ஒரு பகுதி உத்தியோகஸ்தர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts