யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் 1032 வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்முன்னெடுக்கப்படவுள்ளன.விவசாயம்,மீன்பிடி,கால்நடை, சந்தைப்படுத்தல் மற்றும் கைத்தொழில் ஆகிய பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 75,000ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களினூடாகவும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts