யாழ். மாநகர சபை வீதிகளுக்கு காப்பற்

யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகள் 100 மில்லியன் ரூபா செலவில் காப்பற் இடப்பட்டு வருகின்றன என்று யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

carpet2

மாநகர சபைக்குட்பட்ட விக்டோரியா வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி, முனீஸ்வரன் வீதி, மின்சார நிலைய வீதி, கந்தப்பசேகர வீதி, நல்லூர் குறுக்கு வீதி உள்ளிட்ட வீதிகளுக்கே இவ்வாறு காப்பற் இடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்படும் இந்த காப்பற் இடும் பணிகள், இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் பணிகள் அனைத்தும் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் முடிவடையும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Related Posts