Ad Widget

யாழ். மாநகர சபை மேயராக மணிவண்ணன்!- சந்தர்ப்பத்தை வழங்குவாரா டக்ளஸ்?

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆட்சிக்கு ஈ.பி.டி.பி. யினர் வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையை ஆட்சியமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில், ஈ.பி.டி.பி. கைப்பற்றியுள்ள 10 ஆசனங்களே ஆட்சியை தீர்மானிப்பவையாக அமைந்துள்ளன.

இந்நிலையில், கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்திறன் மிக்க வகையில் எந்தவொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் செயற்படவில்லை என்று தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்ற ஈ.பி.டி.பி. தலைமை, சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் வெளியிலிருந்து ஆதரவளிப்பது தொடர்பில் சிந்திக்கக்கூடும் என அதனுடன் நெருக்கமான சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், இது தொடர்பில் ஈ.பி.டி.பி. தரப்பினரால் எவ்விதமான உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை.

அதேவேளை, மணிவண்ணன் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ். ஆணையாளரிடம் ஆட்சியமைப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts