யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வீதிகளுக்கும் ‘காப்பெற்’

jaffna_major_yogeswari_CIயாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வீதிகளும் மிகவிரைவில் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றப்படவுள்ளன என்று தெரிவித்தார் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா.

யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நேற்று நடைபெற்றது. அமர்விலிருந்து எதிரணியினர் வெளிநடப்புச் செய்த நிலையில் ஆளுந்தரப்பினருடன் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இதன்போது மேற்படி திட்டத்தை முதல்வர் அறிவித்தார். யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்களின் கோரிக்கைக்கிணங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ இந்தத் திட்டத்துக்கென ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். மிகவிரைவில் வேலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

மோடிக்கு வாழ்த்து! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை!

Related Posts