யாழ் மாநகர சபையால் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொகுதி 10 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

யாழ் காக்கை தீவு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொகுதி 10 மில்லியன் ரூபா செலவில் மாநகர சபையால் ஆரம்பித்து வைக்கப்பப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப் பரப்பிற்குள் மாநகர சபையின் எல்லைப் பரப்பில் உள்ள விடுதிகள் , உணவகங்களில் இருந்து அகற்றப்படும் கழுவு நீர் சுத்துகரிப்பில் நீண்டகாலமாக எதிர் நோக்கி வந்த பிரச்சணைக்கு தீர்வாக மாநகர சபையின் எல்லைப் பரப்புற்குள்ளேயே காக்கை தீவில் ஓர் கழிவு நீர் சுத்திகரிப்பு பொறிமுறை வகுக்கப்பட்டது.

இதன் மூலம் நாள் ஒன்றிற்கு 80 மெற்றிக்தொன் சுத்திகரிக்கும் வகையிலான சுத்திகரிப்பு இயந்திரப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்பட்டதன் மூலம் நீண்டகாலமாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் மானிப்பாய் பிரதேச சபைக்கும் இடையில் இருந்த முக்கிய விடயத்திற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts