யாழ்ப்பாணம் மாநகர சபையால் நகர்ப்பகுதியில் குத்தகைக்கு விடப்பட்டகடைகள் உபகுத்தகைக்கு விடப்பட்ட விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சரும், முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று தெரியவருகின்றது.
யாழ்.மாநகர சபையில் இடம் பெற்ற மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபை யில் இரு தடவைகள் தீர் மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதற்கமைய வடக்கு மாகாண முதலமைச்சரும் உள்ளுராட்சி அமைச்சரு
உபகுத்தகையில்மான க.விக்னேஸ்வரனால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் மாநகர சபை யால், யாழ்.நகரில் கடைகள் பகிரங்க கேள்வி அறிவித்தல் மூலம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டன. அவற்றை சில கடைக்காரர்கள் உபகுத்தகைக்கு கொடுத்துள்ளனர்.
அவ்வாறனவற்றை மாநகரசபை கண்டறிந்து, சில கடைகளை மாத்திரம் மீள் கேள்வி கோரல் மேற்கொண்டது என்றும், ஏனைய கடைகள் உப குத்தகைக்காரர்களுக்கே கேள்வி கோரல் இன்றி வழங்கப்பட்டன என்றும் கூறப்படுகின்றது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான முறைப்பாடுகளே விசாரணைக் குழுவால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. இன்னும் மூன்று வாரங்களுள் அதுகுறித்த அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.