யாழ்.மாநகர சபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களிலும் இனி வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையில் நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இத்தடை உட்பட மூன்று தீர்மானங்களை மாநகர சபை நிறைவேற்றியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண தரத்திற்குட்டப்பட்ட மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்த முடியாது. உயர்தர மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்தலாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு முன்னதாக வகுப்புக்களை நடாத்த முடியாது.
இத்தீர்மானங்கள் எதிர்வரும் ஜீன் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்.மாநகர சபை மேயர் அறிவித்துள்ளார்.