யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த 5 பேருக்கும் கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.