யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை கைதுசெய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.
யாழ். பிரதான வீதியிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில், விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறி யாழ். பிரதேச செயலாளர் மற்றும் நிஷாந்தன் ஆகியோர் சென்று ஜோடியொன்றை பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த விடுதி உரிமையாளர் தனது விடுதிக்குள், யாழ். பிரதேச செயலாளர் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஆகியோர் அத்துமீறி நுழைந்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், முன்னாள் மாநகரசபை உறுப்பினரைக் கைதுசெய்துள்ளதாகவும் இவரை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.