யாழ்.மாணவர்களின் விசாரணை குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும்: பிரதமர் ரணில்

யாழ்.பல்கலை மாணவர்களின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக சுயாதீன விசாரணைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந் நடவடிக்கையின் பின்னர் மேலும் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் தீர்மானிக்குமென குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாணவர்களின் மரணம் தொடர்பில் எவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென, நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பினார்.

அத்தோடு, இச்சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பான விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதோடு, நாட்டில் மேலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மாணவர்களின் மரணம் குறித்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts