யாழ். மாணவனின் புதிய சாதனை! பல பதக்கங்களை வென்ற மாணவிகள்

இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.

sports

19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில், அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவன் என்.நப்தலி ஜொய்சன் (17 வயது) 4.61 உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.

17 வயதின் கீழ்ப்பட்ட பெண்கள் பிரிவு கோலூன்றிப் பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ். மாவட்ட மாணவிகளே பெற்றனர்.

யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி மாணவி சீ.ஹெரீனா 2.7 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தையும், 2.6 மீற்றர் உயரம் பாய்ந்து பளை மத்திய கல்லூரி மாணவி டி.திவ்யா வெள்ளிப் பதக்கத்தையும், சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி எஸ்.சங்கரி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக, 21 வயதுக்குட்பட்ட 21 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் கோல் ஊன்றிப் பாய்தலில், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரன் 3.30 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், பளை மத்திய கல்லூரி மாணவி ஜே.சுகிர்தா 3.20 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றிருந்தனர்.

அத்துடன், 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல், போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லுரி மாணவன் ஏ.புவிதரன் 3.80 மீற்றர் பாய்ந்து, தங்கப்பதக்கம் பெற்றிருந்தார்.

இந்தப் பிரிவில், அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவர்களான ஆர்.ஜதுசன் 3.60 மீற்றர் தாண்டி இரண்டாம் இடத்தையும், யு. சலக்சன் 3.55 மீற்றர் தாண்டி முன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

கோல் ஊன்றிப் பாய்தலில் 17 வயது ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் யாழ். மாவட்ட மாணவர்களே பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

Related Posts