யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் 125 பேர் கைது

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் சிறுகுற்றம் புரிந்த 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.இ.எரிக்பெரேரா தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டில் 13 பேரும் மதுபோதை குற்றம் தொடர்பாக 8 பேரும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்திய குற்றத்தில் 18 பேரும் பொது இடத்தில் மது அருந்திய 16 பேரும் குடிபோதையில் தொந்தரவு விளைவித்தவர்கள் 14 பேரும் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 40 பேரும் போதை பொருளை விற்பனைக்காக வைத்திருந்த ஒருவரும் சட்டவிரோத மது விற்பனை செய்த 10 பேரும் சட்ட விரோத மணல் ஏற்றியவர்கள் 2 பேரும் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் 3 பேர் உட்பட 125 பேர் உள்ளடங்குவதாக அவர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அவர்களுக்கான தண்டனை பெற்றுகொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts